கட்டண அதிகரிப்பின் பின் புலம் தனியார் மாபியாவின் செயற்பாடுகளே – ஹர்ஷ டி சில்வா
மின்சார கட்டண அதிகரிப்பிற்கு முக்கிய பின்புல காரணம் தனியார் மாபியா குழுக்களின் செயற்பாடுகளே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்திருந்தார்,
2004 ஆம் ஆண்டு நான் பாராளுமன்றத்திற்கு வந்த பொழுது LTL செயல்திட்டங்களுக்கான பங்குகளில் 63 % பெரும்பான்மை சதவீதத்தினை இலங்கை மின்சார சபை கொண்டிருந்தமையை என்னால் உறுதிபட தெரிவிக்க முடியும் . தொடர்ந்து 2005 ஆம் ஆண்டளவில் HELADANAVI திட்டத்திலும் 63% சதவீத பங்கினை மின்சார சபை வகித்திருந்தது .
ஆயினும் தற்பொழுது 23% குறைத்துகொன்டதன் மூலம் தம்மை வழுவிழக்க செய்துள்ளது. இதன் மூலம் தனியார் மயமாக்கல் மாபியாவின் செயற்பாடுகளை நாம் தெளிவாக இனம் காண முடிகின்றது என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் போது மின் கட்டண அதிகரிப்புக்கான பாராளுமன்ற மாற்று திட்ட முன் யோசனைகளை ஹர்ஷ டி சில்வா விபரித்தார்.
இதன் படி முதல் 0 – 30 , அலகு பாவனைக்கு கட்டணம் மாறாது, அத்துடன் 30 – 60 மற்றும் 90 – 120 ஆகிய அலகு கல் பாவைனைகும் மாற்றங்கள் செய்யபடலாகத்து என தெரிவித்த ஹர்ஷ , 180 – 1000 அலகுகள் பாவனையின் பொது கட்டண மாற்றங்கள் ஏற்படுத்த படல் வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி திட்டத்தின் மூலம் உள்நாட்டு நுகர்வோரிடமிருந்து 85 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர் பார்க்கப்படுகின்றது. அல்லது மாற்று திட்டத்தின் மூலம் 82 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த மாற்று திட்டத்தின் மூலம் மின் பாவனை அதிகாமாகும் அதே நேரம் பாவனை அலகுகள் கணிசமான முறையில் குறைவடையும். இதன் மூலம் 3 பில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என ஹர்ஷா.டி. சில்வா மேலும் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment