Pages

Apr 6, 2013

விஷவாயுவை சுவாசித்த இருவர் பலி!


ரத்மலானை அத்இடிய பகுதியில் ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணிகளுக்காக குழி ஒன்றில் இறங்கிய இருவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஷவாயுவை சுவாசித்ததன் காரணமாக அவர்கள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் குறித்த ஹோட்டலில் பணிபுரிந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விஸவாயுவை சுவாசித்ததால் நோய்வாய்பட்ட மற்றுமொரு இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

No comments:

Post a Comment