Pages

Apr 2, 2013

கடலட்டைகளை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர் கைது….

கடலட்டைகளை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர்  கைது….கடலட்டைகளை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 9 கட்லட்டைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரின் பயணப்பையில் கடலட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் , சீனப்பிரஜையெனவும், அவர் புத்தளம் பிரதேசத்தில் தொழில்புரிந்து வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி, 15 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை அரச உடமையாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேக நபர் எச்சரிக்கப்பட்;டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment