'வைக்கோல் எரித்தால் 10 ஆயிரம் ரூபா அபராதம்'
நாச்சியாதீவு பிரதேசத்திலுள்ள வயல்களில் வைக்கோல்களை எரிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என நாச்சியாதீவு பிரதேச செயலாளர் ஜே. டப்ளியு. எஸ். கித்சிரி தெரிவித்தார்.
அத்துடன் வைக்கோல்களை எரிப்போருக்கு உரமானியமும் வழங்கப்படமாட்டாது.
'வைக்கோல் போர்' அறிக்கையை சமர்ப்பித்தால் மாத்திரமே உரமானியம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வைக்கோலை எரித்திருந்தால் அந்த விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment