மதுபோதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கையில் துரித வீழ்ச்சி..
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கையில் துரித வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளி வழங்கும் முறைமை அமுல்படுத்தப்பட்டதையடுத்து குறித்த வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக மோட்டர் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் எண்ணிக்கை பெப்ரவரி மாதத்தில் 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளி வழங்கும் முறைமை நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றிகரமான முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புள்ளி வழங்கும் முறை தொடர்பான தகவல்கள் அனைத்தும் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment