'அவசர அமைச்சரவைக் கூட்டம் தேவை' - ரவூப் ஹக்கீம்.,.

ஒரு சிங்கள பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அப்படி அவர் தூண்டியதாக ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார்.
இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார்.
கோட்டாபாய மீது விமர்சனம்
அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்கள், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறினார்.
அப்படி பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவை குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment