கல்லடி புதிய பாலம் ஜனாதிபதியால் இன்று திறந்துவைப்பு..

1970 மில்லியன் ரூபா செலவில், 289மீற்றர் நீலமும் 14மீற்றர் அகலமும் கொண்ட, இந்தப் பாலம் ஜனாதிபதியால் இன்று 04.30 அளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.
50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாளை அம்பாறையில் இடம்பெறவுள்ளதால் பால நிர்மாண வேலைகள் துரிதமாக்கப்பட்டு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment