Pages

Mar 20, 2013

தன் செல்போனை தந்தை பார்த்ததால் தூக்கிட்ட 14 வயது மகள். ..

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள பரி என்ற இடத்தில் டேவிட் ஸ்டிரிங்கர் என்பவர் தனது 14 வயது மகளான ஜேட் ஸ்டிரிங்கருடன் வசித்து வந்தார்.
கணவன்-மனைவி இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில் தனது மகள் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவளது செல்போனை பரிசோதிக்க ஆரம்பித்தனர்.
இது ஜேட் ஸ்டிரிங்கருக்கு வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், பெற்றோர்களுக்கும், ஜேட் ஸ்டிரிங்கருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஜேட் ஸ்டிரிங்கரிடம் அவரது கைபேசியை கேட்டு அவருடைய தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஜேட் ஸ்டிரிங்கர் தன்னுடைய படுக்கை அறைக்குள் சென்று தூக்கி போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 6 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார். இந்த சம்பவம் கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் 16ம் திகதி நடந்தது.
இவருடைய மரணத்துக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை நடத்திய அதிகாரி கைபேசி தகராறு காரணமாகவே ஜேட் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் இந்த சிறு பிரச்சினை அவளை தற்கொலை அளவுக்கு கொண்டு சென்றது என்பது வருத்தமளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.TCNN

No comments:

Post a Comment