வெள்ளம் பாதித்த மக்களுக்கு நட்டஈடு வழங்க கோரிக்கை.

நேற்றுமுன்தினம்
திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்தை
சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்தக்
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள
கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற
இந்தச் சந்திப்பில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு
வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சரிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளத்தினால்
ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் அவர் முதலமைச்சரிடம் விளக்கினார்.
பொருளாதார
அபிவிருத்தி அமைச்சு,இடர் நிவாரண அமைச்சு, மாகாண சபை ஆகியவற்றின் நிதி உதவிகளைப்
பெற்று கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவரிடம்
உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment