Pages

Aug 11, 2013

கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது ஆயுதங்களுடன் வந்த குழுவொன்றினால் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அப் பிரதேச மக்களுக்கும் ஆயுதங்களுடன் வந்த குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பெரும்பதற்ற நிலை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு பொலிஸார் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பின்பு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கபட்டது.
இந்நிலையில் பதற்ற நிலை இன்றும் தொடர்ந்த நிலையில் அப் பகுதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் மாலை 6 மணி முதல் நாளை காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment